தமிழ்நாட்டிற்கு ஒரு சொட்டுத் தண்ணீர்கூடத் தர
முடியாது
என்று கர்நாடகத்தில் ஆளுங்கட்சி எதிர்க்கட்சி என அனைத்துக் கட்சிகளும் அரசும் கூறுவது வழக்கம்.
ஒரு சொட்டுக்கூட காவிரி நீர் தரமாட்டோம் என்று கர்நாடகம் கூறுவதில் ஒரு கருத்தியல் (ஒரு சித்தாந்தம்) இருக்கிறது.
“தமிழகத்துக்குரிய காவிரி நீரை எவ்வளவு குறைவாகத் தீர்ப்பாயம் வழங்கினாலும் அதையும் தரமாட்டோம். தமிழக அரசு எவ்வளவு குறைவாகத் தண்ணீர்க் கேட்டாலும் அதையும் தரமாட்டோம்; எங்கள் அணைகள் நிரம்பி இருந்தாலும் ஒரு சொட்டுத் தண்ணீர்க் கூடத் தரமாட்டோம்.
“எங்கள் அணைகள் நிரம்பி மிகையாக வெள்ள நீர் வந்தாலும் அது தமிழ்நாடு செல்ல அனுமதிக்க மாட்டோம்; புதிதாக மூன்று அணைகள் கட்டி அந்த வெள்ள நீரையும் தேக்கிக் கொள்வோம்.
காவிரி நீர் எங்களுக்குத் தேவை என்பதைவிடத் தமிழ்நாட்டிற்குத் தரக்கூடாது என்பதே எங்களின் அடிப்படைக் கொள்கை. காரணம் என்னவெனில் நாங்கள் கன்னடர்கள், தமிழ்நாட்டில் உள்ள நீங்கள் தமிழர்கள். இருவரும் வெவ்வேறு இனங்கள். எனவே வேற்றினமான தமிழர்களுக்குக் கன்னட இனத்தைச் சேர்ந்த நாங்கள் காவிரி நீர் தரமாட்டோம்.”
அடுத்த பகுதி
காவிரிச்சிக்கல் - ஓர் முழுமையான வரலாறு
- காவிரி தமிழரின் செவிலித்தாய்
- நடுவர் மன்றத் தீர்ப்பு கூறுவது என்ன?
- ஒரு சொட்டுத் தண்ணீர் கோட்பாடு
- உச்சநீதிமன்றத்தில் முடங்கிக் கிடக்கும் நீதி
- இந்திய அரசின் கர்நாடக ஆதரவுச் செயல்பாடுகள்
- போராட மறுக்கும் பெரிய கட்சிகள்
- நம்பிக்கையூட்டும் காவிரி உரிமை மீட்புக் குழு
- மக்கள் என்ன செய்கிறார்கள்?
- “காவிரிக் குடும்பம்” எனும் இனத்துரோக அமைப்பு
- கங்கை - காவிரி எனும் பித்தலாட்ட சூழ்ச்சித் திட்டம்
- பன்னாட்டு - இந்திய சட்டங்கள் ஏன் இச்சிக்கலில் செயல்படுவதில்லை?
- எப்போது வெல்வோம்? என்ன போராட்டம் நடத்துவது?
0 கருத்துகள்:
Post a Comment