தமிழகத்தின் காவிரி நீர் உரிமையை மீட்க பல்வேறு உழவர் அமைப்புகளும் அரசியல் அமைப்புகளும் இணைந்து உருவாக்கிய கூட்டமைப்பு!


Home » » காவிரிக் குடும்பம் - என்ற இனத்துரோக அமைப்பு

காவிரிக் குடும்பம் - என்ற இனத்துரோக அமைப்பு



தமிழகம் நடத்திவரும் காவிரி உரிமைப் போராட்டத்தில் பார்ப்பனிய நோக்கில் மிகப்பெரிய பின்னடைவை உண்டாக் கினார்கள் சிலர். இந்து என். இராம், மன்னார்குடி ரெங்கநாதன், எம்..டி.எஸ். சனகராசன் ஆகிய மூன்று பேரும் சேர்ந்து சதித் திட்டம் போட்டது போல் சிந்தித்துகாவிரிக் குடும்பம்என்ற ஓர் அமைப்பை உண்டாக்கினார்கள்.

இரு மாநில அரசியல்வாதிகள்தான் காவிரிச் சிக்கல் தீராமல் இருப்பதற்குக் காரணம். இரு மாநில விவசாயிகளும் சந்தித்து மனம் விட்டுப் பேசினால் சிக்கலுக்குத் தீர்வு காண்பார்கள். இரு மாநில விவசாயிகளும்காவிரிக் குடும்பம்என்ற ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் என்றார்கள்.

தமிழ்நாட்டிலும் கர்நாடகத்திலும் சில இனவாதிகள் காவிரிச் சிக்கலை இனச்சிக்கலாக மாற்ற முயல்கிறார்கள் என்றனர் இம்மூவரும். தமிழ்நாட்டு விவசாயிகளின் தலைவராக மன்னார்குடி ரெங்கநாதனும், கர்நாடக விவசாயிகளின் தலைவராக புட்டண்ணையாவும் அக்குடும்பத்தில் இருந்தார்கள். மேற்படி சனகராசன் உட்பட பலர் இருதரப்பிலும் உறுப்பினர்களாக இருந்தார்கள்.

காவிரிக் குடும்பம் சாதித்தது என்ன? தமிழ்நாட்டு விவசாயிகளைக் குழப்பிவிட்டு இருதரப்பு உழவர்கள் பேச்சில் எல்லாம் தீர்ந்துவிடும் என்று நம்பவைத்து தமிழக உழவர்களைப் போராட்டக் களத்திற்கு வராமல் தடுத்ததுதான், இந்து இராம் - மன்னார்குடி ரெங்கநாதன் அமைத்த காவிரிக் குடும்பம் சாதித்த சாதனை! என். இராம், ரெங்கநாதன், சனகராசன் ஆகிய மூவரின் நோக்கமே தமிழக விவசாயிகளும் -தமிழ் இன உணர்வாளர்களும் சேர்ந்து போர்க் குணமிக்க போராட்டம் நடத்தாமல் மடை மாற்றம் செய்ய வேண்டும் என்பது தான். அவர்களின் அந்த நோக்கம் நிறைவேறியது.

கடந்த ஆண்டு உச்ச நீதிமன்றமும் பின்னர் காவிரி ஆணையமும் மிகக் குறைந்த அளவே என்றாலும் தமிழ் நாட்டிற்குத் தண்ணீர் திறந்து விடச் சொன்னது கர்நாடகப் புட்டண்ணையாவுக்குப் பெரும் குற்றமாய்ப் போய்விட்டது. காவிரிக் குடும்பத்தில் கணவர்போல் செயல்பட்ட கர்நாடக விவசாயிகள் சங்கத் தலைவர் புட்டண்ணையா தன்னால் முடிந்தளவு விவசாயிகளைத் திரட்டிக் கொண்டுதமிழ்நாட்டிற்கு ஒரு சொட்டுத் தண்ணீர்க்கூடத் தரக்கூடாதுஎன்ற போராட்டத்தில் கலந்து கொண்டார். தமிழ்நாட்டிற்குத் தண்ணீர் விட வேண்டும் என்ற ஆணையை செயல்படுத்தக் கூடாது என்று கோரி உச்ச நீதிமன்றத்தில் வழக்குப் போட்டார் புட்டண்ணையா.

மணமுறிவு செய்து கொள்ளாமலேயே கைவிடப்பட்ட மனைவி போல் ரெங்கநாதன் ஆனார். திருமணத் தரகர்களாக செயல்பட்ட என். ராமும், சனகராசனும் ஒதுங்கிக்கொண்டனர். இவர்கள் குடும்பம் நடத்தியபோது ஒவ்வொரு குழுக் கூட்டத்திலும் தமிழ்நாட்டு உரிமைக்குப் பாதகமாகவும் கர்நாடகத்திற்குக் கூடுதலாகக் காவிரி நீர் தருவதற்கும் தீர்மானம் போட்டார்கள். பெங்களூர் குடிநீர்த் திட்டத்திற்குத் தேவைக்கதிகமாக இவர்களின் குடும்பக் கூட்டத்தில் தண்ணீர் ஒதுக்கித் தீர்மானம் போட்டார்கள். ஆனால் தமிழகத்தின் ஒகேனக்கல் திட்டத்தைக் கர்நாடகம் எதிர்த்ததைக் கண்டித்து எதுவும் செய்யவில்லை.

என். இராமுக்கும் ரெங்கநாதனுக்கும் ஏற்பட்ட அச்சம் காவிரிச் சிக்கலை வைத்து தமிழ்நாட்டில் தமிழர் உணர்ச்சி, தமிழர் ஒருங்கிணைப்பு உருவாகிவிடுமோ என்பதுதான். அவ்வாறான தமிழர் ஒருங்கிணைப்பு வராமல் தடுக்கக் காவிரியைக் காவு கொடுத்தாவது, ஒரு சூழ்ச்சி செய்ய வேண்டும் என்று சிந்தித்தனர். அந்தச் சூழ்ச்சியின் விளைவுதான் காவிரிக் குடும்பம்.

தமிழ்நாட்டில் அரசியல்வாதிகள் தங்களின் அரசியல் ஆதாயத் திற்காக, கர்நாடகத்துடன் இணங்கிப்போக முடியாத கோரிக் கைகளை வைத்தார்கள் என்று என்.இராம் - ரெங்கநாதன் குழு சொன்னதே, அதில் உண்மை உண்டா? எந்தத் தலைவர் அப்படி இணங்கிப்போக முடியாத கோரிக்கை வைத்தார்?

தமிழ்நாட்டு அரசியல் தலைவர்கள் காவிரிச் சிக்கலில் அக்கறை காட்டுவதில்லை, தமிழ்நாட்டுக்குப் பாதகமான ஆணையம் போன்றவற்றை ஏற்றுக் கொண்டார்கள் என்பதுதான் உண்மை நிலை. இணக்கம் காண முடியாத கோரிக்கையை காவிரியில் கருணாநிதி வைத்தாரா? செயலலிதா வைத்தாரா? இப்பொழு தாவது என்.இராமும் ரெங்கநாதனும் சொல்ல வேண்டும். என். இராம் - ரெங்கநாதன் குழு வைத்த இணங்கிப்போகும் திட்டம்தான் என்ன? கர்நாடக விவசாயிகள் - புட்டண்ணையா உட்பட - தமிழகத்தோடு இணங்கிப் போகும் நோக்குடன் முன்வைத்த திட்டம்தான் என்ன? இப் பொழுதாவது என். ராம் ரெங்கநாதன் குழு அந்த உண்மைகளைச் சொல்லத் தயாரா?

அடுத்து, தமிழ்நாட்டில், இனவெறியைத் தூண்ட காவிரிச் சிக்கலை சிலர் பயன்படுத்துகிறார்கள் என்றார்கள் என். இராம் குழுவினர். கன்னடர்களுக்கு எதிராக, எந்த அமைப்பு, யார் என்ன இனவெறியைத் தூண்டினார்கள்? கன்னடர்கள் 1991--92 இல் காவிரிக் கலகம் என்ற பெயரில் கர்நாடகம் வாழ் தமிழர்களைத் தாக்கினார்கள், வீடுகளை எரித்தார்கள், வணிக நிறுவனங்களைச் சூறையாடினார்கள். தமிழர்களை இனப்படுகொலை செய்தார்கள். பெங்களூரில் திருவள்ளுவர் சிலையைத் திறக்கக் கூடாது என்றார்கள்.

தமிழர்களின் உரிமை என்ற அளவில் காவிரிச் சிக்கல் தமிழ்நாட்டில் உணரப்படக் கூடாது, அது தமிழின எழுச்சியை உண்டாக்கிவிடும். அதைத் தடுத்தாக வேண்டும் என்ற நோக்கில் திசை திருப்பும் வேலையாகத் திட்டமிட்டு என். இராம் - ரெங்கநாதன் - - சனகராசன் குழு உருவாக்கியதுதான் காவிரிக் குடும்பம். இந்தக் காவிரிக் குடும்பத்திற்குக் கர்நாடக அரசு முழு ஆதரவு தந்தது. குடும்பத்தின் கூட்டங்களுக்குக் கர்நாடக அரசுக் காரில் வருவார் புட்டண்ணையா! கர்நாடக அரசின் இதர உதவிகளும் காவிரிக் குடும்பத்திற்குக் கிடைத்தன. திரைமறைவில் கர்நாடக அரசின் உதவியோடும் வழிகாட்டுதலோடும் காவிரிக் குடும்பத்தை என்.இராமும் ரெங்கநாதனும் இயக்கினர். பால் குடித்த மார்பை அறுத்த பாதகர்களை விடவும் கொடியவர்கள் இவர்கள்! தமிழின உணர்ச்சி வளர்ந்து விடக்கூடாது என்பதற்காக காவிரியைப் பலியிடத் துணிந்தார்கள்.


என். இராம் - மன்னார்குடி ரெங்கநாதன் தயாரிப்பான இந்தக் காவிரிக் குடும்பத்தில் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, விவசாயிகள் சங்கத் தலைவர்கள் பங்கு கொண்டார்கள். இன்னும் சில விவசாயிகள் சங்கங்களின் பிரதிநிதிகள் இந்தக் குடும்பத்தில் உறுப்பு வகித்தார்கள். இனியா வது என். இராம், மன்னார்குடி ரெங்கநாதன், எம்..டி.எஸ். சனகராசன் சூழ்ச்சித் திட்டங்களுக்கு விவசாயிகள் சங்கங்களின் தலைவர்கள் துணை போகாமல் இருந்தால் நல்லது.
அடுத்த பகுதி 

காவிரிச்சிக்கல் - ஓர் முழுமையான வரலாறு
  1. காவிரி தமிழரின் செவிலித்தாய்
  2. நடுவர் மன்றத் தீர்ப்பு கூறுவது என்ன?
  3. ஒரு சொட்டுத் தண்ணீர் கோட்பாடு
  4. உச்சநீதிமன்றத்தில் முடங்கிக் கிடக்கும் நீதி
  5. இந்திய அரசின் கர்நாடக ஆதரவுச் செயல்பாடுகள்
  6. போராட மறுக்கும் பெரிய கட்சிகள்
  7. நம்பிக்கையூட்டும் காவிரி உரிமை மீட்புக் குழு
  8. மக்கள் என்ன செய்கிறார்கள்?
  9. “காவிரிக் குடும்பம்” எனும் இனத்துரோக அமைப்பு
  10. கங்கை - காவிரி எனும் பித்தலாட்ட சூழ்ச்சித் திட்டம்
  11. பன்னாட்டு - இந்திய சட்டங்கள் ஏன் இச்சிக்கலில் செயல்படுவதில்லை? 
  12. எப்போது வெல்வோம்? என்ன போராட்டம் நடத்துவது?
Share this video :

0 கருத்துகள்:

Post a Comment

 
வடிவமைப்பு : தமிழ்த் தேசிய வரைகலை, சென்னை-78. | Johny Template | Mas Template
காப்புரிமை © 2013. காவிரி உரிமை மீட்புக் குழு - All Rights Reserved
மூல வடிவமைப்பு Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger