தமிழினத்துக்கு ஆதரவாக போராட முன்வராத பெரிய கட்சிகளின் துரோகத்தனத்தை முறியடிக்கும் நம்பிக்கையாய பிறந்தது காவிரி உரிமை மீட்புக் குழு.
தஞ்சை, திருச்சி, திருவாரூர், நாகை, கடலூர் ஆகிய டெல்டா மாவட்டங்களை மையப்படுத்தி காவிரி உரிமை மீட்புக் குழுவை 2012இல் அமைத்து இந்த மாவட்டங்களில் தொடர்வண்டி மறியல், நடுவண் அரசு அலுவலக மறியல், தமிழக அரசின் பொதுப்பணித் துறை அலுவலக மறியல், தஞ்சையில் மிகப்பெரிய பேரணி, பொதுக்கூட்டம் எனப் பல
போராட்டங்களையும் நடத்தினோம்.
ம.தி.மு.க.,
தமிழ்த் தேசப் பொதுவுடைமைக்கட்சி, நாம் தமிழர் கட்சி, தமிழர் தேசிய இயக்கம், விடுதலைத் தமிழ்ப் புலிகள், தமிழக வாழ்வுரிமைக் கட்சி, மனித நேய மக்கள் கட்சி, திராவிடர் விடுதலைக் கழகம், தமிழக மக்கள் புரட்சிக் கழகம், தமிழக ஒடுக்கப்பட்டோர் விடுதலை இயக்கம், தமிழர் உரிமை மீட்பு இயக்கம், தமிழக விவசாயிகள் சங்கம், தஞ்சை - திருவாரூர் - நாகை மாவட்ட விவசாயிகள் சங்கங்களின் கூட்டமைப்பு, தமிழக உழவர் முன்னணி, தாளாண்மை உழவர் இயக்கம், இயற்கை வேளாண்மை உழவர் இயக்கம், கொள்ளிடம் விவசாயிகள் கூட்டமைப்பு முதலிய பல்வேறு அமைப்புகள் கூட்டாக “காவிரி உரிமை மீட்புக் குழு” என்ற காவிரி உரிமைக்கான போராட்டக் குழுவை 2012 செப்டம்பரில் அமைத்தன.
காவிரி உரிமை மீட்புக் குழு கடந்த 03.12.2013
அன்று தஞ்சை, திருச்சி, திருவாரூர், நாகை, சிதம்பரம் ஆகிய இடங்களில் மாபெரும் ஆர்ப்பாட்டங்கள் நடத்தியது. இந்திய அரசு உடனடியாக காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும். கர்நாடகம் தர வேண்டிய
26 ஆ.மி.க.
பாக்கி நீரை உடனடியாகத் திறந்துவிட அரசமைப்புச் சட்ட விதி 355இன் கீழ் கர்நாடக அரசுக்கு இந்திய அரசு கட்டளைத் தாக்கீது அனுப்ப வேண்டும், தமிழக முதல்வர் செயலலிதா உடனடியாக அனைத்துக் கட்சிக் கூட்டம் நடத்தி, மக்கள் எழுச்சிக்கு முடிவுகள் எடுக்க வேண்டும்; தம் தலைமையில் அனைத்துக் கட்சிக் குழுவினரை அழைத்துக் கொண்டு, தில்லி சென்று பிரதமர் மன்மோகன் சிங்கைப் பார்த்து தமிழகத்தின் கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்த வேண்டும் என்ற கோரிக்கைகள் மேற்படி ஆர்ப்பாட்டங்களில் முழக்கங்களாக எழுப்பப்பட்டன.
அடுத்த பகுதி
காவிரிச்சிக்கல் - ஓர் முழுமையான வரலாறு
- காவிரி தமிழரின் செவிலித்தாய்
- நடுவர் மன்றத் தீர்ப்பு கூறுவது என்ன?
- ஒரு சொட்டுத் தண்ணீர் கோட்பாடு
- உச்சநீதிமன்றத்தில் முடங்கிக் கிடக்கும் நீதி
- இந்திய அரசின் கர்நாடக ஆதரவுச் செயல்பாடுகள்
- போராட மறுக்கும் பெரிய கட்சிகள்
- நம்பிக்கையூட்டும் காவிரி உரிமை மீட்புக் குழு
- மக்கள் என்ன செய்கிறார்கள்?
- “காவிரிக் குடும்பம்” எனும் இனத்துரோக அமைப்பு
- கங்கை - காவிரி எனும் பித்தலாட்ட சூழ்ச்சித் திட்டம்
- பன்னாட்டு - இந்திய சட்டங்கள் ஏன் இச்சிக்கலில் செயல்படுவதில்லை?
- எப்போது வெல்வோம்? என்ன போராட்டம் நடத்துவது?
0 கருத்துகள்:
Post a Comment