“கர்நாடகம் காவிரியில் புதிய அணைகட்டாமல் தடை செய்!”, “தமிழ்நாட்டுக் காவிரியிலும் , தென்பெண்ணையிலும் கர்நாடகம் கழிவு நீரை விடாமல் தடை செய்!”, “காவிரி மேலாண்மை வாரியம் - ஒழுங்குமுறைக் குழு ஆகியவற்றை உடனே அமை!” ஆகிய மூன்று முதன்மைக் கோரிக்கைகளை முன்வைத்து, கடந்த 17.07.2015 அன்று முதல் 19.07.2015 வரை - மூன்று நாட்களாக, காவிரி உரிமை மீட்புக்குழு நடத்திய, “காவிரிக் காப்பு ஊர்திப் பரப்புரை” நான்குமுனை ஊர்திப் பயன நிறைவு பூம்புகார் பொதுக் கூட்டம் 19.07.2015 அன்று மாலை, பூம்புகாரில் நிறைவுற்றது.
தலைமை உரை, திரு வலிவலம் மு. சேரன், தலைவர்,விவசாயிகள் சங்கங்களின் கூட்டமைப்பு
சிறப்பு உரை, பேராசிரியர் த. செயராமன், ஒருங்கிணைப்பாளர், மீத்தேன் திட்ட எதிர்ப்புக் கூட்டமைப்பு
போராட்ட அறிவிப்பு உரை, திரு பெ. மணியரசன், ஒருங்கிணைப்பாளர், காவிரி உரிமை மீட்புக் குழு
சிறப்பு உரை, திரு கி. வெங்கட்ராமன், பொதுச் செயலாளர், தமிழ்த் தேசியப் பேரியக்கம்
0 கருத்துகள்:
Post a Comment