தமிழகத்தின் காவிரி நீர் உரிமையை மீட்க பல்வேறு உழவர் அமைப்புகளும் அரசியல் அமைப்புகளும் இணைந்து உருவாக்கிய கூட்டமைப்பு!


Home » , , » காவிரி உரிமை மீட்புக்குழுப் போராட்டத்தில் தீக்கிரையக்கப்பட்ட கர்நாடக நிதிநிலை அறிக்கை! நூற்றுக்கணக்கான உழவர்கள் – உணர்வாளர்கள் கைது செய்யப்பட்டனர்!

காவிரி உரிமை மீட்புக்குழுப் போராட்டத்தில் தீக்கிரையக்கப்பட்ட கர்நாடக நிதிநிலை அறிக்கை! நூற்றுக்கணக்கான உழவர்கள் – உணர்வாளர்கள் கைது செய்யப்பட்டனர்!

காவிரி உரிமை மீட்புக் குழுப் போராட்டத்தில் தீக்கிரையக்கப்பட்ட கர்நாடக நிதிநிலை அறிக்கை! டெல்டா மாவட்டங்களில் காவிரி உரிமை மீட்புக் குழு ஒருங்கிணைப்பாளர் தோழர் பெ.மணியரசன் உள்ளிட்ட பல்வேறு அமைப்பினர் - நூற்றுக்கணக்கான உழவர்கள் – உணர்வாளர்கள் கைது செய்யப்பட்டனர்!















மேக்கேதாட்டு அணை கட்டும் திட்டத்திற்கு தடை கோரி உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு தொடுத்த வழக்கு விசாரணையில் உள்ளநிலையிலும், இந்திய அரசின் சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சகத்தின் ஒப்புதல் பெறாமலும், மேக்கேத்தாட்டு அணை கட்டும் திட்டத்தைக் கர்நாடக அரசு தனது நிதிநிலை அறிக்கையில் சேர்த்துள்ளது. இத்திட்டத்தை செயல்படுத்துவதற்கு முதல் கட்டமாக ரூ. 25 கோடி வரவு செலவு அறிக்கையில் ஒதுக்கியுள்ளது.

இதற்கு எதிராக தொடர்ந்து போராடி வரும் காவிரி உரிமை மீட்புக் குழு சார்பில், சட்ட விரோத அணை கட்ட நிதி ஒதுக்கிய கர்நாடக அரசின் நிதிநிலை அறிக்கையை எரிக்கும் போராட்டம், இன்று (04.04.2015), காவிரி டெல்டா மாவட்டங்களில் நடைபெறும் என காவிரி உரிமை மீட்புக் குழு அறிவித்து, தமிழகமெங்கும் பரப்புரைகள் மேற்கொள்ளப்பட்டன. அதன்படி, இன்று நடைபெற்ற போராட்டங்களில் நூற்றுக்கணக்கான உழவர்களும், உணர்வாளர்களும் கர்நாடக அரசின் நிதிநிலை அறிக்கையை எரித்துக் கைதாகியுள்ளனர்.

திருவாரூர்
திருவாரூரில்தலைமை அஞ்சல் நிலையம் முன்புமூன்று மாவட்ட விவசாய சங்கங்களின் கூட்டமைப்புத் தலைவர் திரு. வலிவலம் மு. சேரன் அவர்கள் தலைமையில் நடைபெற்ற போராட்டத்தில்காவிரி உரிமை மீட்புக் குழு ஒருங்கிணைப்பாளர் தோழர் பெ.மணியரசன்தமிழர் தேசிய முன்னணி மருத்துவர் இரா. பாரதிச்செல்வன்திருவாரூர் மாவட்ட விவசாய சங்கத் தலைவர் திது. சேதுராமன்தமிழ்த் தேசியப் பேரியக்கப் பொறுப்பாளர் தோழர் இரா. கோவிந்தசாமி, தமிழர் தன்மானப் பேரவை தோழர் பிரகாசுவிடுதலைத் தமிழ்ப்புலிகள் திரு. ஆதவன்,தாளாண்மை உழவர் இயக்க அமைப்பாளர் பொறியாளர் கோ. திருநாவுக்கரசு, அணுசக்திக்கு எதிரான மக்கள் இயக்கப் போராட்டக்குழுத் தோழர்முகிலன்மீத்தேன் திட்ட எதிர்ப்புக் கூட்டமைப்புத் தோழர் கலைச்செல்வம்சாக்கோட்டை திரு. இளங்கோவன் உள்ளிட்ட 300க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர்.

தஞ்சை
தஞ்சைரெயிலடியில்தமிழக விவசாயிகள் சங்க தஞ்சை மாவட்டத் தலைவர் திரு. த. மணிமொழியன் தலைமையில் நடைபெற்றபோராட்டத்தில்விடுதலைத் தமிழ்ப்புலிகள் கட்சித் தலைவர் திரு. குடந்தை அரசன் தமிழ்த் தேசியப் பேரியக்க தஞ்சை மாவட்டச் செயலாளர் தோழர் குழ.பால்ராசு, தமிழர் தேசிய முன்னணி பொதுச் செயலாளர் திரு. அயனாவரம் சி. முருகேசன்இந்திய சனநாயகக் கட்சி மாசியோன், காங்கிரசுக் கட்சி சார்பில் திரு. நாஞ்சில் வரதராசன், மனித நேய மக்கள் கட்சி வணிகப்பிரிவுத் தலைவர் திரு. கலந்தர், தமிழக மக்கள் புரட்சிக் கழகத் தலைவர் திரு. அரங்க குணசேகரன் உள்ளிட்ட 150க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர். போராட்டத்தின் போது, கர்நாடக முதல்வர் சித்தராமையா உருவப்படங்கள் எரிக்கப்பட்டன.

திருச்சி
திருச்சிமேலசிந்தாமணி அண்ணா சிலை முன்புதமிழக விவசாயிகள் சங்க திருச்சி மாவட்டத் தலைவர் திரு. ம.ப. சின்னத்துரை தலைமையில் நடைபெற்ற போராட்டத்தில், 100க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர். போராட்டத் தோழர்களுக்கும் காவல்துறைக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்ட நிலையில், தமிழக உழவர் முன்னணி ஆலோசகர் தோழர் கி.வெங்கட்ராமன்மூத்தப் பொறியாளர் சங்கத் தலைவர் பொறியாளர் செயராமன், தமிழக விவசாயிகள் சங்க மாநில இணைச் செயலாளர் திரு. ராசா சிதம்பரம், மனித நேய மக்கள் கட்சி மாவட்டச் செயலாளர் திரு. பைஸ் அகமது, சமூக நீதிப் பேரவை மாவட்டச் செயலாளர் திரு. இரவிக்குமார், தமிழ்த் தேசியப் பேரியக்கத் தலைமைச் செயற்குழு உறுப்பினர்கள் தோழர் அ.ஆனந்தன், கோ.மாரிமுத்து, திருச்சி செயலாளர் தோழர் கவித்துவன், தமிழ்க் கலை இலக்கியப் பேரவை மாநகரச் செயலாளர் தோழர் இராசாஇரகுநாதன் உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டு வாகனங்களில் ஏற்றப்பட்டனர்.

நாகை
நாகை புதிய பேருந்து நிலையம் அருகில்காவிரி விவசாயிகள் பாதுகாப்பு சங்கத் தலைவர் திரு. காவிரி தனபாலன் தலைமையில்மீத்தேன் திட்ட எதிர்ப்புக் கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளர் முனைவர் த. செயராமன், உழவர் பேரியக்கத் தலைவர் திரு. பாண்டுரங்கன், வேதாரண்ய வட்டார விவசாயிகள் சங்கச் செயலாளர் திரு. ஒளிச்சந்திரன், வழக்கறிஞர் ஞானராஜேந்திரன், தமிழ்த் தேசியப் பேரியக்கப் பொறுப்பாளர் தோழர் பெரியசாமி உள்ளிட்ட 50க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர்.

கடலூர்
கடலூர் மாவட்ட ஆட்சியரகம் முன்பு காவிரி டெல்டா பாசன விவசாயிகள் கூட்டமைப்புத் தலைவர் திரு. இரவீந்திரன் தலைமையில் போராட்டம் நடைபெறவிருந்த நிலையில், போராட்டத் தோழர்கள் ஓரிடத்தில் குவிவதற்குக் கூட காவல்துறையினர் அனுமதி மறுத்து அடாவடித்தனம் புரிந்தனர். உழவர்கள் குவிய குவிய கைது செய்யப்பட்டனர். தற்போது, நிலவரப்படி சற்றொப்ப 50க்கும் மேற்பட்ட உழவர்கள் கைது செய்யப்பட்டு மண்டபங்களில் அடைக்கப்பட்டனர்.  

கைதானோர் அனைவரும், அந்தந்த பகுதிகளில் உள்ள மண்டபங்களில் அடைத்து வைக்கப்பட்டுள்ளனர்.

செய்தித் தொடர்பகம்,
காவிரி உரிமை மீட்புக் குழு
இணையம்:www.kaveriurimai.comபேச: 76670 77075, 94432 74002

Share this video :

0 கருத்துகள்:

Post a Comment

 
வடிவமைப்பு : தமிழ்த் தேசிய வரைகலை, சென்னை-78. | Johny Template | Mas Template
காப்புரிமை © 2013. காவிரி உரிமை மீட்புக் குழு - All Rights Reserved
மூல வடிவமைப்பு Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger