தமிழகத்தின் காவிரி நீர் உரிமையை மீட்க பல்வேறு உழவர் அமைப்புகளும் அரசியல் அமைப்புகளும் இணைந்து உருவாக்கிய கூட்டமைப்பு!


Home » , » கர்நாடகம் புதிய அணைகள் கட்டும் இடத்தில் ஆயிரம் பேர் பேரணியாகச் சென்று மறியல் போராட்டம்! - தோழர் பெ.மணியரசன் அறிவிப்பு!

கர்நாடகம் புதிய அணைகள் கட்டும் இடத்தில் ஆயிரம் பேர் பேரணியாகச் சென்று மறியல் போராட்டம்! - தோழர் பெ.மணியரசன் அறிவிப்பு!


கர்நாடகம்  புதிய அணைகள் கட்டும் இடத்தில் 
ஆயிரம் பேர் பேரணியாகச் சென்று மறியல் போராட்டம்!
காவிரி உரிமை மீட்புக் குழு முடிவு!
 ஒருங்கிணைப்பாளர் தோழர் பெ.மணியரசன் அறிவிப்பு!

காவிரி உரிமை மீட்புக் குழுவின் கலந்தாய்வுக் கூட்டம்நேற்று (17.11.2014) காலைதஞ்சை செஞ்சிலுவைச் சங்கஅரங்கத்தில் நடைபெற்றதுகூட்டத்திற்குக்காவிரி உரிமை மீட்புக் குழு ஒருங்கிணைப்பாளர் தோழர் பெ.மணியரசன்தலைமையேற்றார்.

இக்கூட்டத்தில் .தி.மு.துணைப் பொதுச் செயலாளர் திருதுரைபாலகிருட்டிணன்தமிழர் தேசிய முன்னணிப்பொதுச் செயலாளர் திரு அய்யனாபுரம் சி.முருகேசன்விடுதலைத் தமிழ்ப் புலிகள் நிறுவனத் தலைவர் திருகுடந்தைஅரசன்மூன்று மாவட்ட விவசாய சங்கங்களின் கூட்டமைப்புத் தலைவர் திருவலிவலம் முசேரன்தமிழகவிவசாயிகள் சங்கத் தஞ்சை மாவட்டத் தலைவர் திரு.மணிமொழியன்காவிரிப் பாசன விவசாயிகள் பாதுகாப்புசங்கத் தலைவர் திருகாவிரி தனபாலன்தமிழக விவசாயிகள் சங்க திருச்சி மாவட்டத் தலைவர் திரு...சின்னத்துரைநாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் வழக்கறிஞர் நல்லதுரைமீத்தேன் திட்ட எதிர்ப்புக்கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளர் முனைவர் .செயராமன்மனித நேய மக்கள் கட்சி வணிகப் பிரிவுத் தலைவர் திருகலந்தர்புதிய தமிழகம் கட்சி வழக்கறிஞர் திரு சுகுமார்தமிழ்நாடு வணிகர் சங்கப் பேரவையின் தஞ்சை மாவட்டப்பொருளாளர் திரு வாசுதிருத்துறைப்பூண்டி திரு நெல் செயராமன்திருவாரூர் திரு ஜிவரதராசன்தமிழ்த் தேசியப்பேரியக்கம் சார்பில் தஞ்சை மாவட்டச் செயலாளர் தோழர் குழபால்ராசுதலைமைச் செயற்குழு உறுப்பினர்கள் தோழர்பழஇராசேந்திரன்தோழர் நாவைகறைதோழர் விடுதலைச்சுடர்திருச்சி மாநகரச் செயலாளர் தோழர் கவித்துவன்,திருத்துறைப்பூண்டி ஒன்றியச் செயலாளர் தோழர் தனபாலன் உள்ளிட்டோர் கலந்துக் கொண்டனர்.

கூட்டத்தின் முடிவில் நடந்த செய்தியாளர் சந்திப்பில் காவிரி உரிமை மீட்புக் குழு ஒருங்கிணைபாளர் தோழர்பெ.மணியரசன் பின்வரும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டதாகக் கூறினார்.

1. ஆடுதாண்டு காவிரி என்று அழைக்கபடும் மேகேதாட்டுப் பகுதியில் 48 .மி.கொள்ளவு கொண்ட இரு அணைகள்காவிரியின் குறுக்கே கட்டி கர்நாடக அரசு தமிழ்நாட்டிற்கு ஒரு சொட்டு நீர் கூட வரமால் தடுக்கும் முயற்சியில்ஈடுபட்டுள்ளதுஉச்ச நீதிமன்றம்காவிரித் தீர்பாயம் ஆகிய நீதித்துறை தலைமை அமைப்புகளின் ஆணைகளைத்துச்சமாகத் தூக்கியெறிந்து தமிழர்களுக்கு எதிராக இனப் பகையோடு செயல்படும் கர்நாடக அரசின் இன்னொருஅட்டூழியம் தான் புதிய அணைகள் கட்டும் திட்டம்இரு அணைகளும் கட்டப்பட்டு விட்டால் ஒரு சொட்டுத் தண்ணீர்கூட மேட்டூர் அணைக்கு உபரி வெள்ளமாக வராமல் கர்நாடக அரசால் தடுக்க முடியும்அதன் பிறகு தமிழ்நாட்டில்24,00,000 ஏக்கர் சாகுபடி நிலம் பாலை நிலம் ஆவதுடன்காவிரியால் குடி நீர் பெறும் 20 மாவட்டங்களில் உள்ள பலகோடி மக்கள் குடி நீர் இன்றி பெரும் துயரத்துக்கு ஆளாவார்கள்எனவே தேர்ந்தேடுக்கப் பட்ட ஆயிரம் பேரைஒகேநக்கலில் இருந்து பேரணியாக அழைத்துச் சென்று ஆடுதாண்டு காவிரியில் அணைக்கட்டும் இடத்தில் மறியல்போராட்டம் நடத்திமக்கள் விரோதத் திட்டத்தைத் தடுத்து நிறுத்துவது என்று ஒரு மனதாகக் காவிரி உரிமை மீட்புக்குழு முடிவு செய்துள்ளது.

2. ஆடுதாண்டு காவிரியில் இரண்டு அணைகள் கட்டும் கர்நாடக அரசின் மக்கள் விரோத நடவடிக்கையை எதிர்த்து22.11.2014 அன்று திருவாரூர் மாவட்ட விவசாயிகள் கூட்டமைப்பு திருவாரூர்நாகைதஞ்சை மாவட்டங்களில்நடத்தவுள்ள முழு அடைப்புபொது வேலை நிறுத்தம்தொடர்வண்டி மறியல் போராட்டங்களுக்குக் காவிரி உரிமைமீட்புக் குழு முழு ஆதரவு அளிப்பது என்று முடிவு செய்யப்பட்டது.

3. தமிழ் மக்களைத் தாக்க உள்ள பேராபத்தை உணர்ந்து கொண்டு அவசர நடவடிக்கையாக அனைத்துக் கட்சிக்குழுவினரை அழைத்துக் கொண்டு சென்று தலைமை அமைச்சர் நரேந்திர மோடி அவர்களைப் பார்த்துப் பேசி புதியஅணைகள் கட்டும் திட்டத்திற்கு நடுவண் அரசின் சுற்றுச்சூழல் – வனத்துறையினரும் - நடுவண் அரசின்நீர்ப்பாசனத்துறையினரும்அனுமதியளிக்காமல் தடுத்திட வேண்டும் என்று கோரிக்கை விண்ணப்பம் கொடுத்துஅழுத்தம் தரவேண்டும் என்று தமிழக முதல்வர் திரு பன்னீர்ச்செல்வம் அவர்களை காவிரி உரிமை மீட்புக் குழுஒருமனதாகக் கேட்டுக் கொள்கிறது

இவண்,
பெ.மணியரசன்,
ஒருங்கிணைப்பாளர், காவிரி உரிமை மீட்புக் குழு.

அறிக்கை வெளியீடு
=========================
செய்தித் தொடர்பகம்,
காவிரி உரிமை மீட்புக் குழு
=========================
பேச: 76670 77075, 9443274002
=========================
Share this video :

0 கருத்துகள்:

Post a Comment

 
வடிவமைப்பு : தமிழ்த் தேசிய வரைகலை, சென்னை-78. | Johny Template | Mas Template
காப்புரிமை © 2013. காவிரி உரிமை மீட்புக் குழு - All Rights Reserved
மூல வடிவமைப்பு Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger