தஞ்சையில் காவிரி எழுச்சி மாநாடு
2014 - மார்ச்சு 1 - காரி(சனி)க்கிழமை
காவிரி இல்லாமல் வாழ்வில்லை !
களம் காணாமல் காவிரி இல்லை!!
பன்னாட்டுச் சட்டங்களுக்கும் இந்திய நாட்டுச் சட்டங்களுக்கும் முரணாகத் தமிழகத்தின் காவிரி நீர் உரிமையை கர்நாடகம் மறுக்கிறது.  தமிழ் இனத்தைப் பகை இனமாகக்  கருதும் கன்னட இனவெறி அங்கே கோலோச்சுகிறது.  
கர்நாடகத்தின் தமிழினப் பகை அரசியலுக்கு இந்திய அரசு துணை போகிறது. தமிழினத்தை வஞ்சிக்கிறது.  காவிரித் தீர்ப்பாயம் மிகக்  குறைந்த அளவாக ஒதுக்கிய 192ஆ.மி.க. தண்ணீரை கர்நாடகத்திலிருந்து பெற்றுத் தர
இந்திய அரசு மறுக்கிறது. 
காவிரித்
தீர்ப்பாயத்தின் இறுதித் தீர்ப்பை உச்ச நீதிமன்றத்தின் ஆணைக்காக அரசிதழில் ஒப்புக்கு வெளியிட்டுவிட்டு ஒதுங்கிக் கொண் டது இந்திய அரசு. கர்நாடகம் எதிர்க்கிறது என்பதற்காகக் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க மறுக்கிறது.
தமிழ்நாட்டில் காவிரி உரிமை மீட்க பெரிய கட்சிகள், மக்கள் எழுச்சி உண்டாக்கும் முயற்சியில் ஈடுபடவே இல்லை. 
அனைத்துக் கட்சிக் கூட்டம் கூட்டக் கூட அவை தயாராக இல்லை.  
இந்நிலையில் 28 இலட்சம் ஏக்கர் பாசனப் பரப்பு காவிரி நீர் இல்லாமல் சாகுபடி இழந்துள்ளது.  அல்லது சாகுபடி செய்து தண்ணீர் இல்லாமல் கருகி சாவியாகிப் போகிறது.  தமிழகத்தின் முக்கால் பாக ஊர்களுக்குக் குடிநீர் வழங்கும் காவிரி நீர்க்கும் ஆபத்து ஏற்பட்டுள்ளது. 
காவிரி உரிமை மீட்க, களம் அமைக்க வேண்டியது அவசரத் தேவையாக உள்ளது. 
உழவர்கள்
வலிமையை - தமிழர்கள் ஒற்றுமையை உயர்த்திக் காட்ட காவிரி எழுச்சி மாநாடு ஒரு சிறந்த வாய்ப்பு. 
2014 மார்ச் 1ஆம் நாள் காரி(சனி)க்கிழமை முழுநாள் மாநாடு நடைபெறு கிறது. 
காவிரி அரங்கு, வேளாண் பொருளியல் அரங்கு, சூழலியல் அரங்கு என கருத்தரங்குகள்,  நிறைவரங்கு எனப் பொது அரங்கு, எழுச்சி இசை எனப் பல்வேறு நிகழ்வுகள் இடம்பெற உள்ளன. வல்லுநர்களும், தலைவர்களும் உரையாற்றுவார்கள்.
எதிர்காலப் போராட்டம் குறித்துத் தீர்மானங்கள் நிறை வேற்றப்படும்.  தமிழகம் தழுவிய மாநாடாகத் தஞ்சை மாநாடு நடக்க உள்ளது.  கலந்து கொள்ள இப்பொழுதே அணியமாகுங்கள்.  
இங்ஙனம்,
பெ.மணியரசன்,
ஒருங்கிணைப்பாளர் - காவிரி உரிமை மீட்புக் குழு.
 

0 கருத்துகள்:
Post a Comment