காவிரி வழக்கில் காலம் தாழ்த்திய உச்சநீதிமன்றத்தைக் கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்த முயன்றதாக தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சித் தலைவரும் காவிரி உரிமை மீட்புக் குழு ஒருங்கிணைப்பாளருமான தோழர் பெ.மணியரசன் உள்ளிட்ட150க்கும் மேற்பட்டோர் தஞ்சையில் கைது!
காவிரி வழக்கில் காலம் தாழ்த்தி தமிழகத்திற்கு ஓர வஞ்சனையாக நடந்து கொண்டு கன்னட வெறியர்களுக்குத் துணை போகும் உச்சநீதிமன்றத்தைக் கண்டித்தும், காவிரி மேலாண்மை வாரியத்தை உடனடியாக அமைக்க உத்தரவிடக் கோரியும், காவிரி உரிமை மீட்புக் குழு சார்பில் இன்று (27.01.2014), தஞ்சை மாவட்ட நீதிமன்றம் முன்று ஆர்ப்பாட்டம் நடத்தத் திட்டமிடப்பட்டது. ஆனால், நீதிமன்றத்திற்கு முன் ஆர்ப்பாட்டத்த அனுமதி கிடையாது எனக்கூறி மாவட்டக் காவல்துறையினர் ஆர்ப்பாட்டத்திற்கு அனுமதி மறுத்தனர்.
இவ் ஆர்ப்பாட்டத்திற்கு, தமிழக விவசாயிகள் சங்க மாவட்டத் தலைவர் திரு. த.மணிமொழியன் தலைமையேற்றார். தமிழர் தேசிய இயக்கப் பொதுச் செயலாளர் திரு. அய்யனாவரம் சி.முருகேசன், விடுதலைத் தமிழ்ப் புலிகள் நிறுவனர் திரு குடந்தை அரசன், பாரம்பரிய நெல் பாதுகாப்பு சங்கத் தலைவர் திரு. செயராமன், தமிழக உழவர் முன்னணி பொதுச் செயலாளர் தோழர் காசிநாதன், கடலூர் மாவட்டச் செயலாளர் தோழர் சி.ஆறுமுகம், திராவிடர் விடுதலைக் கழக மாவட்டச் செயலாளர் தோழர் காளிதாசன், தமிழக மனித புரட்சிக் கழகத் தலைவர் திரு. அரங்க குணசேகரன், காவிரி பாசன விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் திரு. காவிரி தனபாலன், பேரழிவுக்கு எதிரான பேரியக்க ஒருங்கிணைப்பாளர் திரு. கே.கே.ஆர்.லெனின், மீத்தேன் திட்ட எதிர்ப்புக்குழு மயிலாடுதுறை ஒருங்கிணைப்பாளர் முனைவர் த.செயராமன், தாளாண்மை உழவர் இயக்கப் பொறுப்பாளர் திரு. கோ.திருநாவுக்கரசு, கொள்ளிடம் பாசன விவசாயிகள் சங்கம் திரு. சிவப்பிரகாசம், மயிலாடுதுறை விவசாயிகள் சங்கம் திரு. திருவரசமூர்த்தி உள்ளிட்ட பல்வேறு அமைப்புகளைச் சேர்ந்த தலைவர்களும், தோழர்களும் என மொத்தமாக 150 பேரை காவல்துறையினர் கைது செய்து வாகனங்களில் ஏற்றினர்.
தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி சார்பில், தலைமைச் செயற்குழு உறுப்பினர்கள் தோழர் பழ.இராசேந்திரன், தோழர் நா.வைகறை, நகரச் செயலாளர் தோழர் இரா.சு.முனியாண்டி, பொதுக்குழு உறுப்பினர்கள் தோழர் விடுதலைச்சுடர், தோழர் பட்டுக்கோட்டை இராசேந்திரன், தோழர் சி.ஆரோக்கியசாமி, த.தே.பொ.க. பூதலூர் ஒன்றியச் செயலாளர் தோழர் காமராஜ், தமிழக இளைஞர் முன்னணி பூதலூர் ஒன்றியத் தலைவர் தோழர் ஆ.தேவதாசு, த.இ.மு. துணைப் பொதுச் செயலாளர் தோழர் ஆ.குபேரன் உள்ளிட்ட திரளான த.தே.பொ.க. தோழர்கள் ஆர்ப்பாட்டத்தில் கைது செய்யப்பட்டனர்.
தஞ்சை வடக்கு வீதியிலுள்ள திருமண மண்டபத்தில் அடைத்து வைக்கப்பட்டு மாலை 6.00 மணியளவில் விடுதலை செய்தனர்.
0 கருத்துகள்:
Post a Comment