கி.பி.1807ம் ஆண்டு அப்போதைய சென்னை மாகாண அரசுக்கும் மைசூர் அரசுக்கும் இடையே காவிரி நதிநீரை பகிர்ந்து கொள்வதில் சிக்கல் ஏற்பட பேச்சுவார்த்தைகள் தொடங்குகின்றன. இந்தப் பேச்சுவார்த்தைகள் சுமார் 85 ஆண்டுகாலம் நீடித்தது.
கி.பி.1892-ம் ஆண்டு காவிரி நதிநீர் தொடர்பான முதலாவது ஒப்பந்தம் சென்னை மாகாண அரசுக்கும் மைசூர் அரசுக்கும் இடையே உருவானது. இந்த ஒப்பந்தப்படி காவிரி ஆற்றின் குறுக்கே மைசூர் அரசு ஒரு அணையைப் புதிதாகக் கட்ட சென்னை மாகாணத்தின் ஒப்புதலைப் பெற ஒப்புக் கொள்ளப்பட்டது.
1866 இல் மைசூருக்கான பிரித்தானிய நிர்வாகத்தைச் சேர்ந்த கர்னல் ஆர்.ஜே.சாங்கி மலைச்சரிவில் விழும் மழைநீரை முழுமையாக பயன்படுத்தும் நோக்கத்தோடு,குளங்கள்,ஏரிகளை ஆழப்படுத்த ,விரிவுப்படுத்த ஆற்றுப் பாசனத்தை அதிகப்படுத்த பெருந்திட்டம் ஒன்றைத் தயாரித்தார்.வறட்சியும் பஞ்சமும் இல்லாமல் செய்வதே இத்திட்ட்த்தின் நோக்கம்.1872லில் பிரித்தானிய இந்திய அரசு ஏற்றுக்கொண்ட்து.லணடனும் ஏற்றுக்கொண்ட்து. இதற்காக புதியதாக பாசனத்துறை உருவாக்கப்பட்ட்து.ஆனால் 1877-78 இல் கடும்பஞ்சம் வந்த்தால் இத்திட்ட்த்தை நிறைவெற்ற முடியவில்லை.
மைசூர் நிர்வாகப் பொறுப்பு மீண்டும் மகாராஜாவிடம் 1881 இல் ஒப்படைக்கப்பட்டது. ஆனால் முக்கிய அதிகாரிகள் வெளைக்கார்ர்களே. சாங்கியின் பாசனத் திட்டங்கள் முழுவீச்சில் தொடங்கப்பட்ட்து.இந்த மாற்றங்கள் சென்னை அரசுக்கு காவிரி நீர் வரத்து குறையுமே என்ற கவலையை உணடாக்கியது.ஏற்கெனவே இதுகுறித்து 1870 வாக்கில் மைசூர் அரசுக்கு கடிதம் எழுதியிருந்த்து சென்னை.அதனை தொடர்ந்தும் பல கடிதப் போக்குவரத்துகள்.
1890 –லில் உதகமணடலத்தில் சென்னை அதிகாரிகளுக்கும் மைசூர் அதிகாரிகளுக்கும் காவிரி நீர் குறித்து கூட்டம் நடந்த்து.மைசூர் தரப்பில் பிரித்தானிய ஆட்சிப் பேராளர் ஆலிவர் செயிண்ட் ஜான்,திவான் கே.சேஷாத்திரி அய்யர் மற்றும் வெள்ளைக்காரத் தலைமைப் பொறியாளர் கர்னல்.சி.பவென் ஆகியோர் கலந்து கொண்டனர்.சென்னைத் தரப்பில் ஆளநர் அவை உறுப்பினர் எச்.சி.ஸ்டோக்ஸ் மற்றும் தலைமை பாசனப் பொறியாளர் ஜி.டி.வால்ச் ஆகியோரும் கலந்து கொண்டனர்.
மைசூர் அரசு தனது தேவைகளுக்கேற்ப நீர்ப்பாசனத் திட்டங்களை செயலபடுத்த அதற்கு நியாமான சுதந்திரங்களை வழங்குவது மற்றும் சென்னை அரசாங்க நலன்களுக்கு ஊனம் ஏற்பட்டு விடாமல் பாதுகாப்பது என்ற இவ்விரு நோக்கத்திற்க்காகத்தான் கூட்டம் நடந்த்து.மாற்றி மாற்றி முன்மொழிவுகள் வைக்கப்பட்டன..
1891லில் மே மாதம் நடந்த இரண்டாவது கூட்டத்திற்க்கு பின் விதிமுறைகள் அடங்கிய ஒரு தொகுப்பினை மைசூர் முன் மொழிந்தது.சில திருத்தங்களும் விளக்கங்களும் பெற்ற பின் 1892 பிப்ரவரியில் சென்னை அவ்விதிகளை ஏற்றுக்கொண்ட்து. அவ்விதிகள்தான் “மைசூர் அரசின் பாசனப் பணிகள் –சென்னை-மைசூர் ஒப்பந்தம்-1892 “ என்று பெயர் பெற்றன.
0 கருத்துகள்:
Post a Comment